மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதம்மாற்ற சர்ச்சை: தஞ்சாவூர் சிறுமி தற்கொலை விவகாரம்.. விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ.!!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். சிறுமி பள்ளியின் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த நிலையில், கடந்த ஜன. 19 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் போது பேசிய காணொளி பதிவில், மதமாற்றம் நடைபெற்ற குற்றசாட்டுகளை முன்வைத்து இருந்தார். மேலும், மதமாற்றத்திற்கு உடன்படாத தன்னை துன்புறுத்தியாகவும், கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி துன்புறுத்தியாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தஞ்சாவூரில் மிகப்பெரிய போராட்டத்தையும் முன்னெடுத்து இருந்தது.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக சார்பிலும், மாணவியின் பெற்றோர் சார்பிலும் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட, இதனை டெல்லி உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் தஞ்சாவூர் சிறுமி தற்கொலை குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், மத மாற்றம் நடந்ததா? எதற்காக சிறுமி தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.