மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை இளைஞர்கள் ஐவர் பலி; ரூ.2 இலட்சம் இழப்பீடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா கோவிலுக்கு வழிபாடு செய்ய ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் சென்னை எழும்பூர், நேரு பார் பகுதியை சேர்ந்த பிராங்க்ளின் (23), ஆண்டோ (20), கிஷோர் (20), கலையரசன் (20), மனோகரன் (19) ஆகியோர் வந்துள்ளனர்.
ஐவரும் சடலமாக மீட்பு
இவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த சமயத்தில், திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஐவரின் உடலையும் அடுத்தடுத்து நீண்ட தேடலுக்கு பின் சடலமாக மீட்டனர்.
இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது சோகம்; 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.!
ரூ.2 இலட்சம் நிதிஉதவி
தகவல் அறிந்து வந்த அவர்களின் பெற்றோரும் கண்ணீர் துயரத்திற்கு உள்ளாகி இருந்தனர். இதனிடையே, இளைஞர்களின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும், இளைஞர்களின் குடும்பத்திற்கு தலால் ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்பச் சுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.. கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.!