மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிகளின் ஆபாச படத்தை பகிர்ந்தவர் தஞ்சாவூரில் கைது.. ஆ., பட விரும்பிகளுக்கு ஆப்பு.!
முகநூலில் சிறுமிகளின் ஆபாச படம், விடியோவை பகிர்ந்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கானூர்பட்டி, அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், முகநூலில் எந்நேரமும் குடியிருந்து வந்த அருண் பிரகாஷ், சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த தகவல் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினரின் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த வல்லம் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் அருண் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.