மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு; கருணாநிதியை பார்க்க முதல் முறையாக மருத்துவமனைக்கு வந்த தயாளு அம்மாள்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார். கலைஞரை பார்க்க அவர் மருத்துவமனைக்கு இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10வது நாளாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளால் தயாளு அம்மாள் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரும் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்தபடி இருக்கிறார். அதனால் தான் இத்தனை நாட்களாக அவர் காவேரி மருத்துவமனை வரவில்லை என்று கூறப்படுகிறது. துணைவியார் ராசாத்தி அம்மாள்தான், கருணாநிதியுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.