மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மயங்கி விழுந்து பலியான சம்பவம்... பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராஜேஷ் - வேதநாயகி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் வேதநாயகி வீட்டில் குழந்தையை தனியாக விளையாட விட்டுவிட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார் . இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தை சத்தமிட்டு கதறி அழுதுள்ளது. குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு ஓடி சென்ற பெற்றோர் குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் குழந்தை மேலும் கதறி அழ தொடங்கியது.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த பெற்றோர் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த வீட்டு வாசலில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு வண்டு போல் ஒரு பூச்சி இருந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இந்த பூச்சி ஏதேனும் குழந்தை கடித்திருக்குமோ என்று எண்ணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயக்கம் அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் விஷ வண்டு கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.