குடி போதையில் இருந்த ரவுடிகள்; சிகரெட் கேட்டு வாங்கி தராததால் பலியான அப்பாவி...!!



The drunken raiders; Innocent victim who asked for cigarettes and did not buy them..

திருவெற்றியூரில் உள்ள காசிமேடு பகுதியில் வசிப்பவர் பிரவீன் (29) இவருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரவீன் நேற்று முன்தினம் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும், அவரது தாய் பார்வதியை பார்க்க சென்றுள்ளார். அதன் பின்னர், அவரது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு சேர்ந்த முகமது முஷீத் (22), அவரது நண்பர் தண்டையார்பேட்டை கிராஸ் ரோடு செரியன் நகரில் வசிக்கும் நசுருல்லா (23), இரண்டு பேரும் குடித்துவிட்டு போதையில் இருந்த நிலையில் பிரவீனிடம் சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளனர்.

பிரவீன் அதற்கு என்னிடம் சிகரெட் இல்லை என கூறியுள்ளார். கடைக்கு சென்று எங்களுக்கு சிகரெட் வாங்கி கொடுத்துவிட்டு போ, என்று அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் இருந்த மோஷித் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து பிரவீன் மார்பில் குத்திவிட்டு பைக்கில் தொப்பி உள்ளனர். கத்திக்குத்து வாங்கிய பிரவீன் வலியில் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முசித் நஸ்ருல்லா இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அவர்கள் இரண்டு பேர் மீதும் அடிதடி மற்றும் கொலை முயற்சி போன்ற பல வழக்குகள் எண்ணூர் காவல் நிலையத்தில் உள்ளது தெரியவந்தது. இருவரும் குடிபோதையில் பிரவீனிடம் சிகரெட் கேட்டு, அவரை கத்தியால் குத்தியுள்ளனர். 

எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து முஷீத் மற்றும் நஸருல்லா இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.