"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த கணவன்... காதலனை அடித்து கொன்ற பகீர் சம்பவம்..!
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞரை, கணவர் கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் குடியிருப்பவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா எட்டாக்காபட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். அந்த பட்டாசு ஆலையில் கருப்பசாமி என்பவர் டிரைவராக வேலை செய்து வந்தார். வேலை பார்க்கும் இடத்தில் ரூபாவுக்கும் கருப்பசாமிக்கு இடையே தொடர்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதயாத்திரை செல்லும் பாண்டி செல்வத்தின் அம்மாவை வழிஅனுப்பி வைப்பதற்காக நேற்று மாலை பாண்டி செல்வம் அவரது ஊருக்கு சென்றுள்ளார். கணவன் வீட்டில் இல்லாததால் ரூபா கருப்பசாமியை வீட்டிற்கு அழைத்து, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஊருக்கு சென்ற பாண்டி செல்வம் நள்ளிரவு இரண்டு மணியளவில் பாண்டி செல்வம் வீடு திரும்பியுள்ளார். வேறொரு ஆணுடன் மனைவி உல்லாசமாக இருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்து, கருப்பாசாமியை கற்கள் மற்றும் கட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கருப்பசாமி உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.