மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முசிறியில் பரபரப்பு... காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்... பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த காவல்துறை.!
திருச்சி மாவட்டம் முசிறியில் புதிதாக திருமணமான காதல் ஜோடி பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கூறி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மலையப்பபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (26) இவர் பிரிட்டானியா பிஸ்கட் ஏஜென்சி யில் வேலை செய்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலாத்தாள் (19), இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் வசந்தகுமார் ஈரோட்டில் வேலை பார்க்கும் போதே வேலாத்தாளுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தகாதல் ஜோடிகள் தங்களது பெற்றோரிடம் அனுமதி கேட்டு இருக்கிறது. இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் அவர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டனர் . இதனைத் தொடர்ந்து வசந்தகுமார் மற்றும் வேலம்மாள் ஆகியோர் நண்பர்கள் முன்னிலையில் நேற்று முசிறி காமாட்சியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தங்களது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் இருவரது பெற்றோரையும் அழைத்து அறிவுரை கூறினார். மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு இடையே சமரசம் செய்து அறிவுரைகளை கூறி புதுமண ஜோடிகளை அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று முசிறி காவல் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.