மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய போதையால் விஷப்பாம்பை பிடித்து புத்தாண்டு பரிசு கொடுத்த இளைஞர்.. பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்..!
கடலூரில் குடிபோதையில் விஷ பாம்பை பிடித்து புத்தாண்டு பரிசு கொடுத்த இளைஞரை அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திருபாதிரிபுலியூர் அருகே மணிகண்டன் என்ற இளைஞர் தலைக்கேறிய போதையால் என்ன செய்வது என்று அறியாமல் விஷ பாம்பை பிடித்து விளையாடியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களிடம் புத்தாண்டு பரிசு தருவதாக கூறி அந்த விஷப் பாம்பை காட்டியுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த மணிகண்டனை அந்த விஷ பாம்பு கடிக்கவே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பாம்புடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.