மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்டிபட்டி கணவாய் அருகே கோர விபத்து.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய வாகனங்கள்.. 4 பேர் பலி.!
ஆண்டிபட்டி அருகே நடந்த கோர விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணி பகுதியில் வசித்து வருபவர்கள் சிவபாண்டி (வயது 48), செல்வம் (வயது 55), பாண்டியராஜன் (வயது 44). இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்றுள்ளனர்.
பின்னர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், ஆண்டிபட்டி கணவாய் திம்மரசநாயக்கனூர் விலக்கு பகுதியில் வருகையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த கேரள சுற்றுலா வேனின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், காரை ஒட்டி வந்த நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பிரபு (வயது 44), சிவபாண்டி (வயது 48), செல்வம் (வயது 55), மற்றொரு கார் ஓட்டுநர் இராமச்சந்திரன் (வயது 35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.