மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து திருமணமாகாத இளைஞர் குத்திக்கொலை; தேனியில் அதிரவைக்கும் சம்பவம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் வசித்து வருபவர் சதிஷ் குமார் (வயது 25). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள ஆங்கூர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் நந்தினி (வயது 31). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இதனால் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், நந்தினிக்கு சதிஷ் குமாருக்கு முன்னதாக ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே, நந்தினியிடம் மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் சரணாகதியாகி இருக்கிறார்.
தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று பிரபாகரன் மற்றும் நந்தினி ஒன்றாக இருப்பதை சதிஷ் குமார் பார்த்து சண்டையிட்டு இருக்கிறார். அச்சமயம் ஆத்திரமடைந்த நந்தினி மற்றும் பிரபாகரன் சேர்ந்து, சதிஷ் குமாரை கண்ணாடி துண்டால் சரமாரியாக குத்தி இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் சதிஷ் குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் பிரபாகரன் மற்றும் நந்தினி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.