மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருட்டு சரக்கு விற்பதில் போட்டித்தன்மை; அரிவாளால் வெட்டிப்படுகொலை.. பெரியகுளத்தில் அதிர்ச்சி.!
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், வடுகபட்டி, ஹைஸ்கூல் தெருவில் வசித்து வருபவர் முருகன். இதே பகுதியை சேர்ந்தவர் பிரபு. இருவரின் வீடும் இதே பகுதியில் இருக்கிறது.
இருவருக்கும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது மோதல் சம்பவமும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வடுகபட்டி பகுதியில் பிரபு முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த தென்கரை காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரபுவை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.