மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிகளே உஷார்.. தீபாவளி செலவுக்கு குடிமகன்கள் டார்கெட்.. மோட்டார் பம்புகள் கவனம்.!
இந்தியா முழுவதும், உலகெங்கும் வாழும் இந்துக்களால் பெருவாரியாக சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகை, 2024 ல் அக்.31 அன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வெளியூர்களில் இருப்போர் சொந்த ஊர் செல்ல தயாராகி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகளும் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை: 13 வயது சிறுமி பலாத்காரம்.. வழக்குக்கு பயந்து கிணற்றில் தள்ளிவிட்டு கொலை..!
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பொதுவாக பண்டிகை நாட்களில் நகரங்களில் கூட்டம் கூடும் இடங்களை கருத்தில் கொண்டு, நகை, பணம் திருட்டு செயல்கள் அரங்கேறும். இதனை கண்காணிக்க மக்கள் கூடும் பகுதிகளில் தீவிர காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.
Diwali | File Pic
இதனிடையே, கிராமப்புறங்களில் கட்டிங், குவாட்டருக்கு அலையும் சில திருட்டு ஆசாமிகள், விவசாய நிலங்களில் உள்ள மோட்டார், வயர் உட்பட பொருட்களை களவாடி செல்வது தொடர்கதையாகிறது. இந்த கும்பலை கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால், பல புகார்கள் புகார்களாகவே இருக்கிறது.
தோட்டத்தில் உள்ள மோட்டார் பத்திரம்
ஒருசில இடங்களில் சிக்கும் திருடர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். எனினும், அவர்கள் திருடிய பொருட்களை தனித்தனியே கழற்றி விற்பனை செய்து வியாபாரம் பார்ப்பதால், அதனை மீட்கும் உரிமையாளருக்கு செலவுகள் தான் அதிகம்.
இவ்வாறான திருட்டு கும்பல் சரக்கு செலவுக்கு திருட்டு செயல்களிலும் ஈடுபடுகிறது. இதனால் குடிகார ஆசாமிகள் தொல்லை இருக்கும் தோட்டத்தின் உரிமையாளர்கள், 2 நாட்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தால் தோட்டங்களில் காவலுக்கு இருப்பது நல்லது.
இன்று கூட கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள கிராமத்தில், விவசாய நிலத்தில் இருந்த நீர் மோட்டார், வயர்கள் திருடப்பட்டுள்ளன என தகவல் கிடைத்துள்ளது.
விவசாயிகளே உஷார்..
இதையும் படிங்க: "நேற்று வந்தவர்களை பற்றி கவலை வேண்டாம்" - தவெக குறித்து முக ஸ்டாலின் சூசகம்?..!