என் கணவர் உயிரோடு இருந்திருந்தால் இதை உங்களுக்கு செய்திருப்பார்... கண்கலங்க வைக்கும் மனைவியின் செயல்.!



thiruppathur-inspector-died-by-corona-and-wife-salutes

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் கடந்த 24 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிடிவ் என வந்துள்ளது. அதனையடுத்து தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து 
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதுகாப்பு உடையுடன் சண்முகத்தின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது சண்முகத்தின் மனைவி செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இறுதி அஞ்சலியின் போது சண்முகத்தின் மனைவி எஸ்.பி.விஜயகுமாரிடம், எனது கணவர் உயிரோடு இருந்திருந்தால் உங்களுக்கு சல்யூட் அடித்திருப்பார். ஆனால் தற்போது அவருக்கு பதில் நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் என கூறி சல்யூட் அடித்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்தது.