மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லெடுத்து அடித்த சிறுவர்கள்; கதறக்கதற கிராமத்தையே பதம் பார்த்த தேனீக்கள் கூட்டம்.!
அமைதியாக இருந்த தேனீக்களை சீண்டி பார்த்த இளைஞர்கள் கூட்டத்திற்கு தேனீ தக்க பாடம் புகட்டியது. அதனால் கிராம மக்களும் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டுள்ளன.
இதனால் கருவேல மரங்களில் இராட்சத அளவிலான தேனீ கூடுகள் இருந்துள்ளன. இந்நிலையில், இன்று சிறார்கள் விளையாடிக்கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக தேனீ கூடுகளை கற்கள் கொண்டு கலைத்ததாக தெரியவருகிறது.
இந்த செயலால் ஆத்திரமடைந்த தேனீக்கள் கிராமத்தில் இருக்கும் 3 தெருவில் வசித்து வரும் மக்களை ஓடஓட விரட்டி கொட்டி தீர்த்தன. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தேனீக்கள் கூடை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும், தேனீக்கள் தாக்குதலில் காயமடைந்த கிராமத்தினரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.