மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனை கல்லூரியில் சேர்த்துவிட்டு விபத்தில் உயிரிழந்த தந்தை : நெஞ்சை உலுக்கும் சோகம்.. மகனின் கண்முன் துயரம்..!
தனது மகனை படிக்க வைத்திட வேண்டும் என்ற ஆவலில் மகனை கல்லூரியில் சேர்த்த தந்தை, மீண்டும் வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி, பாலவாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 40). இவரின் மகன் தனசேகரன். சம்பவத்தன்று தந்தை - மகன் இருவரும் பொன்னேரி எல்.என்.ஜி கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
கல்லூரியில் தனசேகரனை சேர்த்துவிட்டு, பின்னர் இருவருமாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இவர்கள் பொன்னேரி ஏலியம்பேடு அருகே வருகையில் டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், பாஸ்கர் தலையில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார். லேசான காயத்துடன் உயிர்தப்பிய தனசேகரன், தந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.
ஆனால், பாஸ்கர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.