மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 62 வயது காமுகன் கைது.!
3 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, குன்னலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 62). இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இதே கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியை அழைத்த சண்முகசுந்தரம், சிறுமியிடம் சைகை மூலமாக பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறவே, சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.