மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல்நலத்தால் அவதிப்பட்ட தாய் தற்கொலை; மகளும் தாயுடன் விபரீத முடிவு.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரின் மகள் மஞ்சுளா.
இவர்களில் தனலட்சுமிக்கு நீண்ட நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கடுமையான உடல் மற்றும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட தனலட்சுமி, தனது முடிவை மகளிடமும் தெரிவித்து இருக்கிறார்.
தாயின்றி நானில்லை என்ற எண்ணத்தில் இருந்த மகளும் தாயின் முடிவிற்கு சம்மதிக்க, இருவரும் தங்களின் வீட்டில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தாய்-மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.