மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்.. தாயை காப்பாற்ற., தன் உயிரை பணயம் வைத்து பலியான 5 வயது சிறுவன்..! கண்ணீரில் குடும்பத்தினர்..!!
சமையலறையில் இருந்த தாயை பாம்பு கடிக்காமல் காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து பரிதாபமாக பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் அடுத்த குப்பணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு 5 வயதுடைய கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். சம்பவதினத்தன்று இவர் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது தாயார் சமைத்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் தாயை காப்பாற்றுவதற்காக விரைந்து பாம்பை விரட்டியுள்ளார்.
அப்போது பாம்பு சிறுவனை கடித்துள்ளது. இதனால் வலியில் துடித்த சிறுவனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
பாம்பிடமிருந்து தாயை காப்பாற்றும் முயற்சியில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.