#BigNews: தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை.. ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி.!



Thoothukudi Kayathar Alangatti Rain Today

கயத்தாறு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிறுவர்கள் ஆலங்கட்டியை கையில் எடுத்து பார்த்த மகிழ்ந்தனர்.

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழையானது கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை, மிதமான மழை போன்றவை பெய்து வருகிறது. தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் ஆலங்கட்டி மழையானது பெய்துள்ளது. ஆலங்கட்டிகளை கையில் எடுத்து மாணவர்கள் பார்த்து மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.