மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூத்துக்குடியில் பரபரப்பு..!! காணாமல் போன 4 குழந்தைகள்.! அதிரடியாக மீட்ட தனி படை..!! 2 கடத்தல்காரர்கள் கைது.!
தூத்துக்குடி மாவட்டத்தில் யாசகம் பெற்று வந்த பெண்ணின் நான்கு மாத குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து அந்தக் குழந்தை உட்பட 4 குழந்தைகளை காவல்துறை மீட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் கணவர் கைவிட்ட நிலையில் தனது 4 மாத கைக்குழந்தையுடன் தூத்துக்குடி அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி அந்தப் பெண் தனது கை குழந்தையுடன் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வருமான வரிகள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தையை கடத்திய கருப்பசாமி மற்றும் ராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அந்த கும்பலிடமிருந்து குலசேகரம் மற்றும் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். சந்தியாவின் 4 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.