மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி.. தூத்துக்குடி பாதிரியாரின் காம லீலை அம்பலம்.. பேயை விரட்டுவதாக கணவரை பிரிந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை.. பரபரப்பு புகார்..!
பெண்களை உல்லாச போகப்பொருளாக நினைத்து பார்க்கும் ஆட்கள் இருக்கும் வரை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையப்போவதில்லை. நாம் தான் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். பாடம் சொல்லித்தரும் ஆசிரியைக்கே தீயசக்தி பாடம் எடுத்த பாதிரியாரின் பேச்சுத்திறன், குடும்ப சண்டையை கணவருடன் பேசி தீர்ப்பதை விடுத்து மூன்றாவது நம்பரை நம்பி சென்ற பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில், பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜோஸ்வா என்ற இசக்கி (39). இவருக்கு, அங்குள்ள அண்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் தியான இல்லத்தின் பாதிரியார் நண்பராக இருந்து வந்துள்ளார்.
இவரின் மூலமாக ஜோஸ்வாவுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணின் (வயது 33) அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்மணியின் பூர்வீகம் தூத்துக்குடி ஆகும். இவர் திருமணம் முடிந்து தனது கணவர் மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வருகிறார். பெண்மணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து இருக்கின்றனர். தனித்தனியே வாழ்ந்து வந்த தம்பதிகளில், பெண்மணி கடும் மனஉளைச்சலோடு இருந்து வந்துள்ளார். இதற்கு ஜெபம் செய்தால் சரியாகிவிடும் என ஜோஸ்வா தெரிவித்துள்ளார்.
முதலில் ஜெபம் செய்வதாக நாடகமாடிய ஜோஸ்வா, பெண்மணியை அடைய திட்டமிட்டு உன் உடலில் தீயசக்தி இருக்கிறது என கதை கூறி இருக்கிறார். அத்தீய சக்தியை வெளியேற்ற, நீ என்னுடன் உடலுறவு வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பெண்ணும் சம்மதிக்க, பலமுறை இவ்வாறான செயல்கள் தொடர்ந்து இருக்கின்றன. ஒருகட்டத்தில் பாதிரியார் ஜோஸ்வா தான் உன்னை திருமணம் செய்துகொண்டு, குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி இலட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளார்.
ஒருகட்டத்தில் பெண்மணிக்கு ஜோஸ்வாவின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்ப, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். திருமணத்திற்கு சம்மதம் சொன்ன ஜோஸ்வா, தேவாலயத்திற்கு வரும் பெண்களை தனக்கு திருமணம் செய்து வைக்க நீ உதவ வேண்டும் என நிபந்தனையும் வைத்துள்ளார்.
இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பெண்மணி தன்னை ஜோஸ்வாவிடம் அறிமுகம் செய்த பாதிரியாரிடம் நேரில் சென்று தகராறு செய்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் தலைமறைவாகியுள்ள ஜோஸ்வாவை தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் ரீதியாக பயன்படுத்திய பெனடிக் ஆன்டோவின் அந்தரங்க லீலைகள் அம்பலமாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஜோஸ்வா அடுத்த பெனடிக் ஆன்டோவாக செயல்பட்டு சிக்கலில் சிக்கியுள்ளாரா? என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.