மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரம்மி கேமுக்கு அடிமை.. 10 ஆயிரம் கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை.!
ஆன்லைன் ரம்மி கேம் விளையாட பெற்றோர்கள் பணம் கொடுக்கவில்லை என்று பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், வேப்பலோடை கிராமத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரின் மகன் பிரகாஷ். பட்டதாரி இளைஞரான பிரகாஷ், தந்தையுடன் கட்டுமான பணிகளை கவனித்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி கேமுக்கு அடிமையாக இருந்த பிரகாஷ், அவ்வப்போது வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி தாயிடம் பிரகாஷ் அவசரமாக ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்கவே, தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த பிரகாஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். காவல் துறையினர் நடத்திய வ்சிரணையில், கடந்த சில வருடமாகவே ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்த பிரகாஷ், அதற்கு அடிமையாகி ரூ.3 இலட்சம் வரை இழந்துள்ளார். இவ்வாறான நிலையில் தான் தாயிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு, அது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துள்ளார்.