12 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு - திருநெல்வேலியில் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்..!



tirunelveli-palayamkottai-12-aged-minor-girl-died-fever

7ம் வகுப்பு சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வைர காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாளையங்கோட்டை மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதி நாரயாணன். 

இவரின் மகள் தங்கவேணி (வயது12). சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. 

tirunelveli

இதற்காக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறையினர், மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.