மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற தாயே பணத்திற்காக 5மாத குழந்தையை விற்க முயன்ற சம்பவம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள பிரதான சாலையில் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் முன்பாக 3 பெண்கள் மற்றும் 1 ஆண் என 4 பேர் கையில் 5மாத குழந்தையுடன் இருந்துள்ளனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியதில், பெற்ற தாயே பணத்திற்காக குழந்தையை விற்க முயன்றது உறுதியானது.
சம்பவத்தன்று, தூத்துக்குடி காவல்துறை கட்டுப்பாட்டு எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 ஐந்து மாத கைக்குழந்தையை சட்ட விரோதமாக விற்க முயல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் மற்றும் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் தனிப்படை காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது பாளையங்கோட்டை பிரதான சாலையின் முன்பு கோவிலின் அருகில் சந்தேகிக்கும்படி நின்றவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி என்.எஸ்.பி காலனியை சேர்ந்த மாரியப்பன் (வயது 44), கலைவாணன் மனைவி மாரீஸ்வரி (வயது 22) என்பது உறுதியானது. இவர் குழந்தையின் தாய் ஆவார்.
குழந்தையின் பாட்டி அரியம்மாள் (வயது 40), தூத்துக்குடி திரு வி.க நகரை சேர்ந்த சங்கர், இவரது மனைவி சூரம்மா (வயது 70) ஆகியோரும் இருந்தனர். இவர்களை விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் பணத்திற்காக குழந்தையை விற்க முயன்றதாக தெரிய வந்தது. இவர்கள் நான்கு பேரையும் தனிப்படை காவல்துறை கைது செய்து அவர்களிடமிருந்து 5 மாத கை குழந்தையை மீட்டு அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.