#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த போதை பேராசிரியர்கள்; நெல்லையில் பரபரப்பு..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில், அரசு உதவிபெறும் தூய சேவியர் தனியார் கல்லூரியானது செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருவோர் செபாஸ்டின் (வயது 40), பால்ராஜ் (வயது 40).
இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து, தனியார் மதுபான விடுதி ஒன்றில் குடித்து இருக்கின்றனர். பின் அங்கிருந்தவாறு கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு தொடர்பு கொண்ட பேராசியர்கள், அவரை தங்களுடன் மதுவை குடிக்க வருமாறு அழைப்பு விடுத்து, ஆபாசமாக பேசி இருக்கின்றனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதனால் பதறிப்போன மாணவி பெற்றோரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவே, மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், பேராசிரியர் செபாஸ்டின் என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... மாணவருக்கு பாலியல் தொல்லை.!! போக்சோ சட்டத்தில் 2 ஆசிரியர்கள் கைது.!!
மேலும், பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவான நிலையில், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதனிடையே, கல்லூரி நிர்வாகம் இரண்டு பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 3 வயது சிறுவன் கொடூர கொலை; குடும்ப தகராறில் பெண் வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்.!