கும்பலாக சுத்துவோம், தொங்கிகிட்டே தான் வீட்டுக்குப்போவோம் - அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் ஆபத்து பயணம்.. பகீர் வீடியோ.!



Tirunelveli Palayamkottai School Students Travel Footfore of Bus

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நகரம், திருநெல்வேலியின் பிரதான பகுதியாக அறியப்படுகிறது. அங்கு செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தோரும் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவ்வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்த அரசு பேருந்தின் பின்பக்க படிகட்டில் மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பகீர் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இதனை விடியோவாக பதிவு செய்த சமூக ஆர்வலர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோவை பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.