"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
திருப்பூர் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் திருட்டு.. பீதியை கிளப்பிய பகீர் சம்பவம்.!
நவீன யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், நமது தரவுகள் அனைத்தும் எங்கெங்கோ சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்டத்தை பெற உதவும் ரேஷன், மருத்துவ காப்பீடு திட்டங்கள் முதல் நமது அடையாளம், ஆதார ஆவணமாக இருக்கும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச அளவில் வெளிநாடுகளில் நடைபெறும் மருத்துவ நோயாளிகளின் தகவல் திருட்டை போல, திருப்பூரிலும் நோயாளிகளின் திருட்டு சம்பவமும் நடந்துள்ளதாக தெரியவருகிறது. தகவல் திருட்டு தொடர்பான குற்றங்களில் ஈடுபடும் ஹேக்கர்கள், நமது தகவலை திருடி விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் கடந்த 2007ல் இருந்து 2011ம் ஆண்டு வரையிலான நோயாளிகளின் தரவுகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. இதனை டெலகிராம் மூலமாக விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தை கண்டறிந்த கிளவுட் செக் அமைப்பு, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர், இது வதந்தியாக இருக்கலாம். கிளவுட் நிறுவனம் என்ற பெயரில் வந்துள்ள தகவலில், அவர்கள் சாப்ட்வேர் ஒன்றை வாங்க சொல்லியுள்ளார்கள். அதுகுறித்து நிபுணர்களுடன் விவாதித்து விசாரணை நடத்தி வருகிறோம்.