மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போனில் சொக்கி பேசி மசாஜுக்கு கூப்பிட்டு பர்னிச்சர் கடை உரிமையாளரை பதறவைத்த பெண்.. திருப்பூரில் பகீர் செயல்.!
மசாஜ் செய்வதாக பெண் கூறியதை கேட்டு சென்றவரிடம் போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1 பவுன் நகை, 3 ஏ.டி.எம் கார்டை இழந்த பர்னிச்சர் கடை உரிமையாளரின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் செயல்பட்டு வரும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சண்முகராஜ். இவருக்கு சம்பவத்தன்று தொடர்பு கொண்ட பெண்மணி மசாஜ் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது, பெண்மணி தெரிவித்த அலுவலகத்திற்கு சென்ற சண்முகராஜுக்கு பெண்மணி மசாஜ் செய்யும் போது, அதனை மறைந்திருந்த 2 பேர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
பின்னர், இதனை காண்பித்து மிரட்டி அங்கேயே வைத்து 1 பவுன் நகைகள், 3 ஏ.டி.எம் கார்டை வாங்கி தப்பி சென்றுள்ளனர். பின்னர், ரூ. 3 இலட்சம் பணம் கேட்டு மிரட்டல் நடந்துள்ளது.
இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட சண்முகராஜ் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் மூவரும் ஒரே கும்பல் என்பது அம்பலமானது.
விசாரணைக்கு பின்னர் கரூரை சேர்ந்த யுவராஜ், கோகுல் ராஜ், உடுமலையை சேர்ந்த புஷ்பலதா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.