மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சித்திக்கு பாலியல் தொல்லை.. நண்பனை குடும்பத்துடன் சேர்ந்து கொன்று புதைத்த வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
பாலியல் தொல்லை கொடுத்த நபரை வீட்டிற்கு வரவழைத்து கொண்டு புதைத்த வழக்கில், கொலை செய்தமைக்காக 3 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்ட்டு ஆயுள் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம், பாரதி நகரில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவருடைய இரண்டாவது மனைவி ஜெயலட்சுமி (வயது 30). ராக்கப்பனின் முதல் மனைவி மகன் அருண்பாண்டியன் (வயது 19).
அங்குள்ள தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் திருவரசு (வயது 26). திருவரசுவும் - அருண் பாண்டியனும் நண்பர்கள் ஆவார்கள். இந்த சமயத்தில் ஜெயலட்சுமிக்கு திருவரசு பாலியல் தொல்லை கொடுக்கவே, விஷயம் அருண் பாண்டியனுக்கு தெரியவந்துள்ளது.
கடந்த 2014 ஏப்ரலில் ராக்கப்பன் திருவரசுவை தனது வீட்டிற்கு வரவழைத்து தனது தந்தை மற்றும் தாயுடன் சேர்ந்து அவரை கொலை செய்தார். பின்னர் வீட்டிலேயே உடலை குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில், திருவரசுவை காணவில்லை என அவரின் சகோதரர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணைக்கு பின்னர் உண்மை அம்பலமாகி தந்தை, சித்தி, மகன் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண் பாண்டியன் ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி, மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தனர்.