விருப்பமில்லாத திருமணத்தால் புதுமணப்பெண் விபரீதம் : திருமணமான 7 மாதங்களில் கண்ணீரில் புரளவைத்த பரிதாபம்.!



Tiruppur Uthukuli new Married Girl Suicide

பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், திருமணம் முடிந்த 7 மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, தளவாய்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரியா (வயது 25). கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக இவருக்கு திருமணம் நடைபெற்ற முடிந்தது. 

இந்த திருமணத்தில் பிரியாவுக்கு விருப்பம் இல்லாத நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்துள்ளார். பின்னர், சில நாட்கள் கணவரின் வீட்டில் இருந்தவர் பெற்றோர் வீட்டிற்கே திரும்பியுள்ளார். 

இதனையடுத்து, பிரியாவை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளனர். இருப்பினும், விருப்பமில்லாத திருமணத்தால் மன உளைச்சலில் உச்சத்திற்கு சென்ற பிரியாவுக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஊத்துக்குளி காவல் துறையினர், பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.