மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் தலையை துண்டித்து... கொடூர கொலை செய்த கணவன்! காவல்துறை கைது.!
திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத்த தகராறு காரணமாக மனைவியின் தலையை துண்டித்து படுகொலை செய்த பூ வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மெயின் ரோடு டிஎம்எஸ் நான்காவது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(36), இவரது சொந்த ஊர் மதுரை. திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் பவித்ரா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.
பவித்ராவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று இரண்டாவதாக மணிகண்டனை திருமணம் செய்திருக்கிறார். பவித்ரா தனது தாயாருடன் அடிக்கடி பேசுவது தொடர்பாக மணிகண்டன் மற்றும் பவித்ராவிற்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து இருக்கிறார். மேலும் அவரது தலையையும் துண்டித்து தனியாக எடுத்துள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் பவித்ராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மனைவியை கொலை செய்து விட்டதாக அவர்களிடம் தெரிவித்திருக்கிறார் மணிகண்டன். இதனைத் தொடர்ந்து திருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 16 வெட்டு காயங்கள் இருந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.