ஊடகவியலாளர் நேசப்பிரபுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை; குடும்பத்திற்கு ஆறுதல்.!



TN BJP President Annamalai Meet News 7 Tamil Reporter NesaPrabhu 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த தனியார் பத்திரிகை நிருபர், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல் துறையினரும் தொடக்கத்தில் நடவடிக்கை எடுக்காதது தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்பட்டது. 

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கட்சி தொடர்புடையவர்கள் என்று கருதப்படுவதால், அவர்களின் தரப்பினர் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் நேசப்பிரபு டாஸ்மாக் கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து செய்தி பதிவிடாமல் இருக்க பணம் வாங்கியதாகவும் கூறினார். 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், உடலில் 65 இடங்களில் வெட்டுக்காயத்துடன் நேசப்பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரை இன்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவரின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர், சகோதரர் திரு. நேசபிரபு அவர்களை, இன்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினோம்.

சகோதரர் நேசபிரபு அவர்களின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி, தமிழ்நாடு பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தோம். நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை" என கூறியுள்ளார்.