மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் சமரசமே கிடையாது, யார் தவறு செய்தாலும்., முதல்வர் பரபரப்பு பேச்சு.!
தமிழகத்தில் மிக முக்கியமானது சட்டம் ஒழுங்கு. அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் பாரபட்சம் கிடையாது என தமிழ்நாடு முதல்வர் பேசினார்.
சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு நடைபெறும் முதல் மாநாடு. இரண்டாவது கொரோனா அலைபரவலை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். அதற்கு உங்களுக்கு பாராட்டுக்கள்.
அரசின் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. வரலாறு காணாத மழை, தடுப்பூசி பணி என ஓய்வின்றி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி என பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு, அது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவு உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர், வனத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடைபெறவுள்ளது.
சுற்றுசூழல் காலநிலை தொடர்பான ஒருங்கிணைந்த மாநாடும் நடைபெறவுள்ளது. 10 வருடத்தில் பசுமைப்பரப்பை 33 % உயர்த்த நாம் உழைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் மிக முக்கியம். அதனை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது. மக்களை பாதிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்களை ஒடுக்க காவல் துறையினர் பாரபட்சம் காண்பிக்க கூடாது.
சாலை விபத்துகளில் தமிழகம் பிரதான மாநிலமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மாவட்ட அளவு, வட்ட அளவு என தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் உரிய காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்க கூடாது. போதைப்பொருள் விவகாரத்திலும் அதே முடிவுதான். மதரீதியாக ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களை ஆட்சியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.