மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் பள்ளி வாகனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. விபரம் இதோ.!
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்களின் பள்ளிக்கு வந்துசெல்லும் மாணவ-மாணவியரை அழைத்து வந்து மீண்டும் வீட்டிற்கு கொண்டுசென்று விட தனக்கு சொந்தமான பேருந்து, சிற்றுந்து போன்ற வாகனங்களை பயன்படுத்துகிறது. ஒப்பந்த அடிப்படையிலும் தனியார் சார்பில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
ஒருசில தனியார் பள்ளிகள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றன. பராமரிப்பு இல்லாத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் முன் சமர்ப்பித்து உரிய அனுமதிக்கு பின்னர் இயக்க வழிவகை செய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளிவாகனத்தில் பெண் உதவியாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். வாகன ஓடினார்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன், 10 ஆடுகள் அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் சிசிடிவி கேமிரா கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.