மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சைபர் குற்றவாளிகள் புது டெக்னீக்.. பக்கா பிளானுடன் Boss Scam..! எச்சரிக்கை விடுத்த சைலேந்திர பாபு.. உஷார்..!!
Boss Scam என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் கண்டுபிடித்துள்ள புதிய ரூட்டை கண்டறிந்துள்ள தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு, அதுகுறித்த காணொளியை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்ததால் இருந்து, அதனை வைத்து தொடர் திருட்டு செயல்களும் அதிகரித்து வருகிறது. இணையவழியில் நடைபெறும் மோசடியை தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில், "ஆன்லைன் மோசடியில் புதுவிதமான மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரி தங்களுக்கு தொடர்பு கொண்டு, அமேசான் கிபிட் கூப்பன் வாங்கி அனுப்ப சொல்லுவார்கள். அதற்கு பணம் பின்பு தருகிறேன் என்று கூறுவார்கள். எனது அலைபேசி நம்பரில் இருந்து, எனது குரலில் பேசுவது போலவும் கூறுவார்கள்.
நீங்களும் அவரை நம்பி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை வாங்கி அனுப்புவார்கள். அல்லது அவர்கள் அனுப்பும் லிங்கை திறப்பீர்கள். உங்களின் பணம் பறிபோய்விடும். நீங்கள் ஏமார்ந்த பின்புதான் அனைத்தும் தெரியவரும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அல்லது அழைப்பு வந்தால் காவல்துறையின் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவியுங்கள். பணம் ஏமார்ந்து இருந்தால் அதனை மீட்கவும் முடியும். விரைவாக செயல்படுங்கள், சுதாரிப்பாக செயல்படுங்கள். இந்த மோசடிக்கு பெயர் Boss Scam என்று அழைப்பார்கள். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் சுதாரிப்புடன் இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்கள்: 100, 112, 1930