மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பண்டிகை "சரக்கு" விற்பனைக்கு அசத்தல் திட்டம்.. அள்ளஅள்ள குறையாமல் இருப்பு வைக்க உத்தரவு.!
கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் மதுபான விற்பனை என்பது பாதிக்கப்பட்டது. 2022 போன்களில் மதுபான விற்பனையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஒமிக்ரான் அச்சம் மற்றும் அதிகரிக்கும் கொரோனா காரணமாக ஜன. 16 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்று மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருக்கும். ஜன. 15 ஆம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படுகின்றன. இதனால் 2 நாட்கள் தொடர்ந்து மதுபானக்கடைகள் விடுமுறையில் இருக்கும் என்பதால், ஜன. 14 ஆம் தேதி மதுபான விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ஜன. 14 ஆம் தேதிக்கு முன்னதாக மதுபானத்தை அதிகளவு கடைகளில் இருப்பு வைக்கவும், 2 நாட்களுக்கு விற்பனையாகும் மதுபானத்தையும் சேர்த்து இருப்பு வைக்கவும் மதுபானக்கடை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட பெருநகரம் மட்டுமல்லாது, கிராம புறத்திலும் உள்ள மதுபானக்கடையில் மதுபானத்தை இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை பொறுத்த வரையில் மதுபானக்கடையில் ரூ.250 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என்ற நிலையில், 2 நாட்கள் தொடர் விடுமுறையில் அது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மதுபான விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க, கூடுதல் மதுபானங்கள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மதுபானம் அருந்துவது நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல் நலத்திற்கும் கேடு. எதிர்காலத்தை சீரழிக்கும்".