மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரிவை சந்தித்தது பீர், பிராந்தி விற்பனை; குடிமகன்களின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?..!
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதம் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், தமிழ்நாடு அரசு மதுபானக்கடைகளில் பீர் ரக மதுவின் விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகளவு இருந்தது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் பீர் விற்பனை அமோகமாக இருந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியபோதிலும், தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்ததால் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் மேற்குதொடர்மலை மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசுவதால், பலரும் பீர் வகைகளை பெரும்பாலும் தற்போது வாங்குவது இல்லை.
இதனால் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பீர் ரக மதுவின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் விற்பனையான பீர் பாட்டில்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
வெயிலுக்கு இதமாக பீர் குடித்த பலரும், தற்போது குளிருக்கு இதமாக விஸ்கி, ரம், பிராந்தி போன்ற மதுவகைகளை வாங்கி வருகின்றனர். இதனால் அதன் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை விரதத்தின் காரணமாக மதுவிற்பனையும் சரிவை சந்தித்துள்ளது.
கடவுளின் பெயரை சொல்லியாவது 2 முதல் 3 மாதங்கள் மதுவுக்கு விடுமுறை விடுவதைப்போல, ஒவ்வொரு தனிநபருக்கு தனது உடல்நலனை கருத்தில் கொண்டு மதுவை அருந்தாமல் இருப்பது உங்களுக்கும், உங்களின் குடும்பத்திற்கும் நல்லது.