மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றும் அதிகரித்த தங்கத்தின் விலை! இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
தொடர்ந்து உயர்ந்துவரும் தங்கத்தின் விலை நடுத்தர மக்களை கவலை அடைய வைக்கிறது. கடந்த பல வாரங்களாக தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்ட இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய்கள் உயர்ந்து 3727 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இப்படியே போனால் விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.