மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னைவாசிகளே உஷார்! குடியரசு தினத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வரும் 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடற்கரைச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவானது அரசு சார்பில் சென்னை கடற்கரை சாலையில் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி கடற்கரைச் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நிலையில் வரும் 19, 22, 24 ஆகிய தேதிகளில் அணிவகுப்புக்கான ஒத்திகை நடைபெறுவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாரிமுனை, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடற்கரையைச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.