மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோட்டத்திற்குச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்... காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம்..!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மடள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். இவர் வழக்கம்போல் தனது தோட்டத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். மேலும் இவரது தோட்டமானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அப்போது அங்கு வந்து காட்டு யானை ஒன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தேவராஜை விரட்டி காலால் மிதித்து கடுமையாக தாக்கியுள்ளது.
இந்நிலையில் தேவராஜின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து யானையிடமிருந்து தேவராஜை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தேவராஜன் யானை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த தேவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விளைநிலத்திற்கு யாரும் தனியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.