மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயிலில் திடீரென ஆடையை அவிழ்த்த நபர்! கடுப்பில் பொங்கி எழுந்த சக பயணிகள்!
திருச்சியில் இருந்து சென்னை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு இளைஞன் திடீரென தனது பேண்டை கழற்றியுள்ளான். அது சக பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது.
திருச்சியில் இருந்து சென்னை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் இன்று 4:20க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது. அதில் பல பயணிகள் பயணித்தனர். இந்தநிலையில் முன்பதிவு செய்து செய்து பயணம் செய்த ரயில் பெட்டியில் குடும்பத்துடன் பலர் பயணம் செய்தனர்.
அதே பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் பயணித்தனர். அப்போது அதில் ஒரு இளைஞன் திடீரென தனது பேண்டை கழற்றியுள்ளான். அது சக பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது. இதனையடுத்து குடும்பத்துடன் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த இளைஞனை திட்டியுள்ளார். பெண்கள் உட்பட பயணிக்கும் ரயிலில் இவ்வாறு செய்யலாமா? கழிவறைக்கு சென்று உடையை மாற்றிக்கொள்ளலாமே என ஹிந்தியில் அவனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞன், நான் ட்ரவுசர் அணிந்திருந்ததால் தான் பேண்டை கழற்றினேன். இருந்தாலும் நான் செய்தது தவறு தான் மன்னித்துவிடுங்கள் என மன்னிப்பு கேட்டுள்ளான். திடீரென அந்த இளைஞன் செய்த செயல் சக பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது. தமிழ்நாட்டிற்கென்று தனி கலாச்சாரங்கள் உள்ளது. பொது இடங்களில் இது போன்ற செயலை செய்யாதீர்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.