மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி: நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உறக்கத்திலேயே மரணம்? நூடுல்ஸ் பிரியர்களே, பெற்றோரே உஷார்.!
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான். இவரின் மகள் ஜாக்லின் (வயது 16). திருச்சியில் செயல்படும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். நூடுல்ஸ் இவருக்கு பிடித்தமான உணவு என கூறப்படும் நிலையில், அவ்வப்போது வீட்டில் சமைத்தும், ஆன்லைனில் ஆர்டர் செய்தும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
நூடுல்ஸ் சாப்பிட்டு மரணம்?
இதனிடையே, நேற்று முன்தினம் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி, பின் மறுநாள் காலையில் எழவில்லை. அவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இதனால் உடலை நல்லடக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை; 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்.!
பிரேத பரிசோதனை
அவசர கதியில் அனைத்தும் நடைபெற்ற நிலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நீண்ட வாக்குவாதம் மற்றும் பேச்சுவார்தைக்குப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். அதன் பின்னரே சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என போலீசார் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் பால் பண்ணையில் பயங்கரம்; இயந்திரத்தில் முடி சிக்கி, பெண் தலை துண்டித்து பலி.!