மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபஒளி சிட்பண்ட் மோசடி.. திருச்சியில் ஈகிள் சதீஷ் பண்ட் நிறுவனம் முன் மக்கள் போராட்டம்; காவல்துறை குவிப்பு..!
மக்களிடம் ஏலசீட்டு நடத்தி பணம் வசூலித்த நிறுவனம், பணத்தை கொடுக்க மறுத்ததால் மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், ஆண்டாள் வீதியில் ஈகிள் சதீஷ் பண்ட் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் தீபஒளித் மற்றும் பொங்கல் ஏலசீட்டு பிடித்தம் செய்வதாக கூறியுள்ளது.
இந்த நிறுவனத்தை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறைந்தபட்சம் தலா ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை என மாதாமாதம் செலுத்தி வந்துள்ளனர்.
தற்போது தீபஒளித்திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், பணம் செலுத்திய மக்கள் பணத்தை கேட்டுள்ளனர். மக்களின் தொகையை நிர்வாகம் கொடுக்க மறுத்ததாக தெரியவருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று திறந்து போராட்டம் நடத்தினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.