மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பண்ணை வீட்டில் 3 பெண்களுடன் முதியவர் ஜல்சா.. கண்ணைக்கட்டி நெஞ்சில் குத்தி., திதிபுவென... பரபரப்பு சம்பவம்.!
தொழிலதிபர்களை குறிவைத்து காம வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்த மோசடி கும்பல் சிக்கியுள்ள நிலயில், வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, மாந்துறை பகுதியில் காவல் துறையினர் இரவுநேர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் இருந்தவர் கண்களை கட்டிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் கடத்தல் நடவடிக்கை என அதிகாரிகள் சுதாரிக்க, காரில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர். 2 பேர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், திருச்சியில் உள்ள தில்லைநகரை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ் (வயது 50). இவர் தொழிலதிபர் ஆவார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஜோசப்பின் நண்பர் தாமஸ், இவர் சென்னையில் வசித்து வருகிறார். தாமஸுக்கு சொந்தமான பண்ணை வீடு கல்லணை, சாயிபாபா கோவில் எதிரே உள்ள காவேரி கரையில் உள்ளது.
இந்த பண்ணை வீட்டில் கோழி, முயல் மற்றும் வாத்து போன்றவற்றை வளர்த்து பராமரிக்கும் பணியை ஜோசப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சல்லாப காம எண்ணத்துடன் சுற்றிவந்த ஜோசப்புக்கு, ஸ்ரீரங்கம் புதுத்தெருவில் வசித்து வந்த சுந்தரி (வயது 40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பண்ணை வீட்டிலும், காவேரிக்கரை ஓரத்திலும், நீரிலும் என உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், தொழிலதிபரான ஜோசப், சுந்தரிக்கு செலவுக்காக பணத்தை வாரி கொடுத்துள்ளார்.
மேலும், கள்ளக்காதலி சுந்தரியிடம் எனக்கு இளம் பெண்கள் வேண்டும் என்று கேட்டு ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளார். உள்நோக்கு திட்டத்துடன் இருந்த சுந்தரியும் ஜோசப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதை போல நடித்து, தனது வீட்டருகே இருக்கும் 18 வயது இளம்பெண், பியூட்டி பார்லரில் பணியாற்றி வரும் கல்பனா என்ற பெண்மணி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஜோசப் மற்றும் கல்பனா, சுந்தரி, இளம்பெண் என அனைவரும் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஜோசப் பண்ணை வீட்டின் குளியல் தொட்டியில், சல்லாபத்தில் மிதந்துகொண்டு இருந்தபோது தடபுடலாக வந்த கும்பல் ஜோசப்பை வீடியோ எடுத்துள்ளது. மேலும், அவரை சரமாரியாக தாக்கி, அவரின் காரிலேயே லால்குடிக்கு அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, பேரம் பேசப்பட்டு ரூ.10 இலட்சம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், ரூ.1 இலட்சம் கூகிள் பே மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீதி தொகை பேசி முடிக்கப்பட்ட நிலையில், ஜோசப்பை மீண்டும் பண்ணை வீட்டில் விட்டுச்சென்ற வழியில் கும்பல் காவல் துறையினர் வசம் சிக்கிக்கொண்டுள்ளது. இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் கோவிந்தராபும் ராஜா (வயது 27), திருவெறும்பூர் சபரி (வயது 28), லால்குடி சசிகுமார் (வயது 20), அருண் குமார் (வயது 30), கவின் குமார் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வழிப்பறி, கடத்தல் குற்றவாளிகள் ஆவார்கள்.
மேலும், வெடிகுண்டு வழக்கு உட்பட, பல வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி காட்டூர் தமிழ், கூட்டாளி ஸ்ரீநாத், சுந்தரி, கல்பனா ஆகியோர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டு தேடப்படுகின்றனர். ரௌடி தமிழின் காதலி, கள்ளக்காதலி என்று வர்ணிக்கப்படும் சுந்தரி, தன்னிடம் சிக்கும் தொழிலதிபரிடம் முதலில் உல்லாசமாக இருந்து, பின்னர் தமிழ் மொள்ளமாக கடத்தல், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் 100 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் சிக்கி பணத்தை இறந்ததாகவும் கூறப்படுகிறது.