மின்விசிறியில் தூக்கில் கிடந்த சிறுவன்; பெற்றோர் கண்ணீர்.. திருச்சியில் சோகம்.!



Trichy manaparai Minor Boy Died 


திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, மருங்காபுரி, அயன்பொருவாய் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரின் மகன் ராஜா (வயது 13). 

சிறுவன் ராஜா, அங்குள்ள பாலக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதனிடையே, சிறுவனின் பெற்றோர் இருவரும் கட்டிட கூலித் தொழிலாளர்கள் என்பதால், சனிக்கிழமை அன்று வழக்கம்போல வேலைக்கு சென்று இருந்தனர். 

இதையும் படிங்க: வருண்குமார் Vs நாதக பிரச்சனை உண்டாகியது எப்படி? முழு விளக்கம்.. பரபரப்பு தகவல்.!

சிறுவன் சடலமாக மீட்பு

பின் மீண்டும் இரவு நேரத்தில் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, சிறுவன் தூக்கிலிட்ட நிலையில் காணப்பட்டு இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வளநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: கண்ணுல கலர், நாக்க வெட்டு.. ஏலியன் உலகமான திருச்சி?.. டாட்டூ கலைஞர் கைது.!