மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலை கைவிட மறுத்து, கணவனை கைலாயம் அனுப்பிய மனைவி.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
கள்ளக்காதல் உறவை கைவிட வற்புறுத்திய கணவரை, மனைவி ஈவு இரக்கமின்றி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை அதிரவைத்துள்ளது. காவேரி - கொள்ளிடம் ஆற்றில் உடல் பாகங்கள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பயங்கரத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம், மாகாளிக்குடி காலனி தெருவில் வசித்து வருபவர் பிரபு (வயது 30). மனைவி வினோதினி (வயது 27). பிரபு பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4ம் தேதி பிரபு மாயமான நிலையில், வினோதினி சமயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, வினோதினிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் சேர்ந்து பிரபுவை கொலை செய்து இருக்கலாம் எனவும் பிரபுவின் உறவினர்கள் காவல் துறையினரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் வினோதினியை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது, சமயபுரம் அண்ணா நகரில் வசித்து வரும் பாரதி (வயது 23) என்பவருடன் வினோதினி கள்ளக்காதல் உறவில் இருந்ததை உறுதி செய்தனர். பாரதி ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அதிர்ச்சி உண்மையாக கணவர் பிரபுவை, கள்ளக்காதலன் பாரதியுடன் சேர்ந்து கொலை செய்த வினோதினி, பாரதியின் நண்பர்கள் ரூபன் பாபு (வயது 26), ஸ்ரீவான் (வயது 18), திவாகர் (வயது 18) ஆகியோரின் உதவியுடன் உடலை பாதி எரித்து கொள்ளிடத்தில் வீசியது அம்பலமானது.
இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியுடன், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என ஐவர் கைது செய்யப்பட்டனர். வினோதினி அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகின.
அதில், "வினோதியான எனக்கும் - ஆட்டோ ஓட்டுநர் பாரதிக்கும் இடையே கடந்த ஓராண்டாகவே கள்ளக்காதல் தொடர்பு இருந்தது. நாங்கள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்தோம். இந்த தகவல் எனது கணவர் பிரபுவுக்கு தெரியவந்தது. அவர் எங்களை கண்டித்தார்.
இதனால் நானும் - பாரதியும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 4ம் மதுபோதையில் இருந்த பிரபுவுக்கு, உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும், பாரதியை வரவழைத்து பிரபுவின் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.
பாரதி மற்றும் அவரின் நண்பர்கள் ரூபன் பாபு, ஸ்ரீவான், திவாகர் ஆகியோரின் உதவியுடன் மறுநாளில் பிரபுவின் உடலை மன்னார்புரம் புதரில் வீசி தீவைத்து சென்றோம். உடல் முழுமையாக எரியாத காரணத்தால், காவல்துறையினருக்கு பயந்து உடலை மூட்டைகட்டி இருக்கின்றனர்.
கை-தலைப்பகுதி காவேரி ஆற்றிலும், உடல் பாகங்கள் கொள்ளிடத்திலும் வீசப்பட்டுள்ளது. பின் உறவினர்களை நம்பவைக்க கணவரை காணவில்லை என நாடகமாடவே, காவல் துறையினரின் விசாரணையில் உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தால், அதிகாரிகள் துப்புதுலக்கி கைது செய்துள்ளனர்" என வினோதினி தெரிவித்துள்ளர்.
கள்ளக்காதலன் பாரதியின் மீது முன்னதாகவே போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுள்ளது.