மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விதியை மீறிய பயணம், விதி முடித்த சோகம்: இருசக்கர வாகனம் - டூவீலர் மோதி; இளம் நண்பர்கள் 3 பேர் பரிதாப பலி..!
சாலைகளில் மட்டுமல்லாது எந்த விஷயத்திலும் பாதுகாப்பு விதிகளை மீறிய அலட்சியம், கட்டாயம் விபத்தில் கொண்டு சேர்க்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது 3 இளைஞர்களின் கோர மரணம்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் கோட்டாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவி. இவரது மகன் வினோத் (வயது 19). அப்பகுதியை சார்ந்தவர் ராஜு. ராஜுவின் மகன் ராம் (வயது 20). செல்வராஜ் என்பவரின் மகன் ஆனந்த் (வயது 22). இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி பயணம் செய்துள்ளனர். பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில், ஆலத்தூர் நக்கசேலம் பகுதியில் சென்றபோது அவ்வழியே வந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நண்பர்கள் ராம் மற்றும் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பாடலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.