ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
சமயபுரம் கோவிலில் சுற்றிய பாம்பை பிடித்த முதியவர், பாம்பு கடித்து பலியான சோகம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், திரௌபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நடேசன். இவரின் மகன் ராஜா (வயது 60). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ராஜா குடும்பத்தாரை பிரிந்து வந்துவிட்ட நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், சாலையோரத்தில் வசித்து வந்த நிலையில், கோவில் வளாகத்தின் ரூ.250 டிக்கெட் கவுண்டர் பகுதியில் நல்ல பாம்பு சுற்றியுள்ளது. இதனைக்கண்ட அதிகாரிகள் பதறியடித்து ஓட்டம் எடுக்கவே, ராஜா நல்ல பாம்பை கைகளில் பிடித்துள்ளார். அப்போது பாம்பு அவரின் வலது கைகளில் கண்டித்துள்ளது. மீண்டும் இடது கையையும் கடித்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், ராஜாவை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.