மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூதாடிய கடனை அடைக்க பச்சிளம் குழந்தை விற்பனை.. கேடுகெட்ட தந்தையின் சூது நட்பால் வந்த வினை.!
வேலைக்கும் செல்லாமல் சூதாடி பொழுதை கழித்தவர், கடனை அடைக்க பச்சிளம் குழந்தையான மகனை விற்பனை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காந்திபுரம், தேவர் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஸலாம் (வயது 40). இவரின் மனைவி கைருன்னிசா (வயது 36). இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ள நிலையில், கைருன்னிசா மீண்டும் கர்ப்பமாகி, கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தைக்கு முகமது பாசில் என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அப்துல் ஸலாம், வேலைக்கு செல்லாமல் பணத்தில் சூதாடும் பழக்கத்தை வைத்துள்ளார்.
மேலும், தன்னிடம் பணம் இல்லாத சமயங்களில் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடி வந்துள்ளார். இதனால் பின்னாளில் கடனாளி ஆகவே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். தன்னுடன் சூதாடி வந்த தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் வாங்கிய கடனால் அல்லல்பட்டுள்ளார்.
அவர் பணத்தை கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த காரணத்தால், செய்வதறியாது திகைத்துள்ளார். ஆரோக்கியசாமியோ வாங்கிய கடனை நீ எப்படியும் கொடுக்கப்போவது இல்லை. கூடுதலாக ரூ.80 ஆயிரம் தருகிறேன். உனக்கு பிறந்துள்ள புதிய குழந்தையை என்னிடம் தான். நான் குழந்தையை உறவினரிடம் கொடுத்து, நன்றாக வளர்க்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
அப்துல் ஸலாமும் தனது மனைவியின் மனதை மாற்றி குழந்தையை விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளவே, கடந்த 19 ஆம் தேதி குழந்தை விற்கப்பட்டுள்ளது. அப்துல் ஸலாமின் குழந்தையை ஆரோக்கியராஜின் சகலையான பஞ்சப்பூரை சேர்ந்த சந்தான மூர்த்திக்கு கொடுத்துள்ளனர். சந்தான மூர்த்திக்கு குழந்தை ஏற்கனவே பிறந்தது இறந்ததால், அவரிடம் குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைருன்னிசா தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கணவரிடம் கதறி அழவே, அப்துல் அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவியை தேற்றியுள்ளார். பிள்ளையை பெற்றெடுத்த மனம் பதறி, அவர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆரோக்கியராஜ், அவரின் உறவினர் பொன்னர், சந்தான மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.